மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம், மீறினால் அபராதம்!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக மருத்துவத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் சுற்றித்திரியும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times