அதிராம்பட்டினம் முக்கிய பள்ளியொன்றில் பயிலும் மாணவர்களின் இரு சக்கர வாகனங்கள் காவல் துறையிடம் சிக்கியது.
இந்த சம்பவம் குறித்து சக மாணவர் ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் நாளையுடன் +2 தேர்வுகள் முடிவுக்கு வருகிறது என்றும், இதன் காரணமாக் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து ஜாலியாக இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்தோம் என்றார்.
அதன் ஒரு பகுதியாக தாங்கள் பயிலும் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்றுள்ளனர் பள்ளி காவலாளி போலிசுக்கு தகவலை தட்டி விட்டுள்ளார்.
தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளி வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த மாணவர்களின் இரு சக்கர வாகனங்களை பிடுங்கி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
காவல் துறையின் கவனத்திற்கு….
நாளைய தினம் +2 தேர்வுகள் முடிவுக்கு வரும் சூழலில் இரு சக்கர வாகனங்களில் அதி வேகமாக செல்வது, முட்டைகளை பரஸ்பரம் அடித்து கொள்வது, சட்டைகளை கிழிப்பது குறிப்பாக கல்வி கூடங்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற தேவையற்ற வீணான சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது ஆதலால் நாளைய தினம் தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் தீவிர கண்கானிப்பை உறுதி செய்வதோடு, வாகன தனிக்கையிலும் ஈடுபட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பெற்றோர்கள் கவனத்திற்கு…
தமது பிள்ளை செல்வங்கள் மேல்நிலை முடித்து கல்லூரிக்கு அடிகோலும் தேர்வை எழுதி வருகிறார்கள் நாளைய தினம் கடைசி தேர்வும், பள்ளி வாழ்க்கைகு முடிவு நாளாகவும் இருப்பதினால் நம்ம வீட்டு பதின்ம வயது பசங்க இருசக்கர வாகனங்களில் பறந்து செல்ல கூடும் அதனை தடுக்க வேண்டியது உங்களின் தலையாய கடமை இல்லையேல் காவல் நிலைய வாயிலில் காத்திருக்க நேரிடும் எச்சரிக்கை !