தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையும் அதிரை நகராட்சியின் செயல்வடிவமும்!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கவேண்டும் என்றும் முன்னோடி முதல் மாநிலமாக தமிழகம் நம்பர் ஒன் இடத்தை பெறவேண்டுமென்று தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சுகாதாரத்திற்கும் அழகான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்

அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை தோறும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி என்னும் ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள் அந்த திட்டத்திற்கு மே மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை அதிராம்பட்டினம் நகராட்சியில் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அத்துடன் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து மக்கள் காத்திருப்பு காக்க அமைக்கப்பட்டிருக்கும் நிழல் குடையுடன் பேருந்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் நிறுத்தி மக்களை ஏற்றி இறக்கி செல்ல பேருந்து ஓட்டுனர்கள் இடமும் வலியுறுத்தப்பட்டது

இந்நிகழ்வின் பொழுது அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் தூய்மை பணி ஆய்வாளர் அவர்களும் இவர்களுடன் அதிரை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமு கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்து பணியை துவக்கி வைத்தனர்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders