அல்-மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் சேர்க்கை தொடக்கம்!!

அல் மதரஸத்துஸ் ஸலாஹியயா அரபிக் கல்லூரி
காதிர் முகைதீன் கல்லூரி வளாகம் அதிராம்பட்டினம்-614701
தஞ்சாவூர் மாவட்டம் அன்புடையோர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் அல் மதரஸத்துஸ் ஸலாஹியயா அல்லாஹ்வின் உதவியால் 123 வருடங்களாக நல்ல முறையில் நடந்து வருகிறது. இங்கிருந்து பல ஆலிம்களும் ஹாஃபிழ்களும் பயின்று பட்டம் பெற்று பல இடங்களில் தீன் பணி செய்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

நமது மதரஸாவில் மாணவர்களின் தொழுகை ஒழுக்கம் மற்றும் பாடங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. முழுமையாக சுன்னத்தை கடைப்பிடித்து வாழ பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் ஆலிம் வகுப்புகளுக்கான அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்படுகிறது. மேலும் அத்துடன் சேர்த்து ஹஃப்ஸ் மற்றும் ஸப்வு காரி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரபு, உருது, ஃபார்சி ஆகிய மொழிகளில் புலமை ஏற்பட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இத்துடன் கணிதப் பாடத்தை சிறப்பாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் அரபி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கணினியில் டைப்ரைட்டிங் பயிற்சியையும் மாணவர்களுக்கு பயின்று கொடுக்கப்படுகிறது.

மேலும் நமது மதரஸாவில் தஜ்விதுடன் அதாவது குர்ஆனை எவ்வாறு ஓத வேண்டுமோஅவ்விதத்தில் ஓதி கொடுக்கப்பட்டு பிறகு அதனை மனனம் செய்ய வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஹாஃபிழ்கள் குர்ஆனை ஒரே நாளில் பார்க்காமல் பாடம் கொடுப்பதற்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் மாலையில் சந்தோஷமாக விளையாடுவதற்கு மைதான வசதியும் உள்ளது.

எனவே நம் பிள்ளைகளை நம் மதரஸாவிற்கு அனுப்பி பல சிறப்புகளை உலகத்திலும் மறுமையிலும் அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.

இவ்வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு மதரஸா திறப்பு தேதி 15-05-2022

அல்லாஹு தஆலா நம் மதரஸாவையும் இன்னும் உலகத்தில் எங்கெல்லாம் மார்க்கக் கல்விகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றதோ அப்படிப்பட்ட அனைத்து மதரஸாக்களையும் பொருந்திக் கொண்டு கியாமத் நாள் வரை தொடர்ந்து சிறப்பாக செழிப்பாக நடத்துவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்வானாக!ஆமீன்!

தொடர்புக்கு:
M.K.N.Madrasa Trust (Waqf) மு.கா.நெ. மத்ரஸா அறக்கட்டளை(வக்ஃப்)

அதிராம்பட்டினம் – 614701
Mob: 9344733213, 9003405258

Prayer Times