டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் முதலாம் ஆண்டு சிறுவர்களுக்கான கிராத் போட்டி! (முழு விபரம்)

- Advertisement -
Ad imageAd image

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகம் நடத்தும் முதல்முறையாக சிறுவர் சிறுமிகளுக்கான கிராத் போட்டி. இப்போட்டியில் உங்கள் பிள்ளைகளை பங்கேற்கச் செய்து பரிசுகளை வெல்லுங்கள். இப்போட்டி சிறுவர் சிறுமிகளின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டாகவும், சிறுவயதிலேயே குர்ஆனில் ஆர்வம் கொள்வதற்காகவும் இப்போட்டி நடத்தப்படுகிறது.

பரிசு தொகை

முதல் பரிசு – 6000₹

இரண்டாம் பரிசு – 4000₹

மூன்றாம் பரிசு – 2000₹

மேலும் சிறப்பாக ஓதும் 100 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் குறிப்புகள் பின்வருமாறு

விதிமுறைகள் :-

1) இப்போட்டியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

2) போட்டியாளர்கள் 13 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

3) அல் குர்ஆனின் ஏதேனும் ஒரு சூராவை தெளிவான உச்சரிப்புடனும், தஜ்வீத், கிராத் உடனும் ஓதவேண்டும்.

4) போட்டியாளர்களுடைய வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக இருக்க வேண்டும். இப்போட்டியில் பங்கு பெறக்கூடியவர்கள் TIMES OF ADIRAI youtube சேனலை SUBSCRIBE செய்து இருக்கவேண்டும்.

5) வீடியோக்கள் எங்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை (TIMES OF ADIRAI) YOUTUBE சேனலில் ஒளிபரபப்படும்.

6) ஆலிம்கள் மூலம் தெளிவான கிராத், உச்சரிப்பு மற்றும் தஜ்வீத் போன்றவை அடிப்படையில் மட்டும் தான் தேர்ந்து எடுத்து பரிசு வழங்கப்படும்.

7) வீடியோ அனுப்பும் நாள் 20/05/2022 முதல் 05/06/2022 இரவு 12:00 மணிக்குள் அனுப்பிவைக்கவும். அதன் பிறகு அனுப்பும் வீடியோ ஏற்றுக்கொள்ளப்படாது!

8) உங்கள் குழந்தைகளின் Video, முழு பெயர், வயது மற்றும் தெரு போன்ற விபரங்களுடன் கீழ்காணும் Whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். வாட்ஸப் எண் : 9994222582

10) இன்ஷா அல்லாஹ் பரிசுகள் வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

11) இந்த போட்டி அதிரையை சார்ந்த பிள்ளைகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

12) Landscape முறையில் எடுத்து அனுப்பப்படும் விடீயோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

13) வீடியோவின் கால அளவு 2 – 4 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

மேலும் எங்கள் சேனலில் UPLOAD செய்யப்படும் சில கிராத் வீடியோவின் நடுவே ஒரு மார்க்க கேள்விகள் கேட்கப்படும் (மொத்தம் 20) பதிலை மொத்தமாக எங்கள் Whatsapp எண்ணிற்குக்கு அனுப்பி வைக்கவும்.

குறிப்பு : பதில் அனுப்பும் போது உங்கள் பெயர், வயது, தெரு மற்றும் எந்த வீடியோவில் கேள்வி இருந்தது, அந்த விடியோவின் Reg எண் என்ற விளக்கத்துடன் அனுப்பவேண்டும், இதற்கு தனி பரிசு உண்டு.!

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.

https://youtube.com/c/TIMESOFADIRAI

மேல் அதிக தகவலுக்கு : 9994222582

வீடியோ எடுக்கும் முறை⬇️

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Comments are closed.

Prayer Times

Playlist

7 Videos