உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜப்பான் அஷிகஹா யமஸ்டசோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
இங்குள்ள, நூர் மஸ்ஜித்தில் ஆண்களுக்கு காலை 6 மணி, 7 மணி ஆகிய வேளைகளிலும், பெண்களுக்கு காலை 8 மணிக்கும் பெருநாள் சிறப்புத் தொழுகை தனித்தனியாக நடத்தப்பட்டது.