அதிரையில் கடந்த சில தினங்களாக ஜியோ நெட்வொர்க் மிகவும் மோசமாக இருக்கிறது, இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிரையில் முடங்கி இருந்தது, அதன் பிறகு தாற்காலியமாக ஜியோ நெட்வொர்க் வேலை செய்து வந்தாலும், ஜியோ நெட்வொர்க் வருவதும் போவதுமாக தான் இருந்து வருகிறது.
அதனை முன்னிட்டு அதிரை வண்டிப்பேட்டையில் இன்று இரவு முதல் தற்போது வரை ஜியோ நெட்வொர்க் நிர்வாகம் அண்டர் கிரவுண்ட் கேபிள் புதிதாக மாற்றி அமைக்க பட்டுக்கொண்டிருக்கிறது.
டைம்ஸ் ஆப் அதிரை ஊடகம் நேரில் சந்தித்து விசாரித்த பொது விரைவில் ஜியோ நெட்வொர்க் சரி செய்யப்பட்டு அதிரை பொதுமக்களுக்கு நிரந்தரமாக நேர்த்தியாக செயல்படும் என்று ஜியோ நெட்வொர்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.