நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேலாண்மைகுழு தலைவராக 12வது வார்டு கவுன்சிலர் தேர்வு.

அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் 23, 4, 2022 அன்று பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலாண்மை குழு தலைவராக சகோதரி ராளியா முகமது சைபுதீன் அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிராம்பட்டினம் நகராட்சித் துணைத் தலைவர் இராம குணசேகரன் 8-வது வார்டு உறுப்பினர் அபுதாகிர் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அந்தப் பகுதியை முக்கியஸ்தர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பாக குழந்தைகளின் தாய்மார்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Prayer Times