அதிராம்பட்டினம் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அதிராம்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் நாளை (30.09.2026, புதன்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை, சேர்மன்வாடி நேருஜி தெருவில் அமைந்துள்ள NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் (இமயம் சூப்பர் மார்க்கெட் அருகில்) நடைபெறும்.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். முகாமில் பங்கேற்பவர்களுக்கு ECG, BMD Test (எலும்பு தேய்மானப் பரிசோதனை), USG ஸ்கேன், மருந்துகள், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், முகாமில் கலந்துகொண்டு முதன்முறையாக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இரத்தப் பரிசோதனைகள், ECG ஸ்கேன் மற்றும் X-Ray முழுவதும் இலவசம். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு 50% சலுகைக் கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: 6384002320, 7871812220, 8838528416

