அதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா மத்ரஸாவின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் உலமாக்களின் சந்திப்பும் சிந்திப்பும் நிகழ்ச்சி நாளை புதன்கிழமை (30-09-2026) காலை 9:00 மணியளவில் மத்ரஸா வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் தொடக்கமாக மத்ரஸாவின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும், அதனைத் தொடர்ந்து சிறப்பு துஆ மஜ்லிஸும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, உலமாக்கள் ஒன்றுகூடும் சிந்தனை அரங்க நிகழ்வானது “தற்கால சூழ்நிலையும் உலமாக்களின் பொறுப்புகளும்” என்ற தலைப்பில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக நடைபெற உள்ளது. இப்பயனுள்ள நன்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், உலமாக்கள் மற்றும் பெரியோர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


