அதிராம்பட்டினம் கடற்கரை தெரு, தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக, 2025–2026 கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் “கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் பரிசளிப்பு விழா” நடைபெற உள்ளது.
இது குறித்து தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் கூறியிருப்பதாவது:
விழா விவரங்கள்:
நாள்: 05-06-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: கடற்கரை தெரு, அதிராம்பட்டினம்
மாணவர்களுக்கான சிறப்பு பாராட்டு:
அதிராம்பட்டினம் மற்றும் கடற்கரை தெரு அளவில், 2025–2026 கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்த ஆலோசனைகள் அடங்கிய “கல்வி விழிப்புணர்வு சிறப்பு உரை” இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், முஹல்லா வாசிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம்,
கடற்கரை தெரு, அதிராம்பட்டினம் – 614701.



