மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் டாக்டர் ஐந்தருஷ் அவர்களின் மகனும், மர்ஹூம் மேகர் அலி, சர்புதீன், ஹமீது சுல்தான் ஆகியோரின் சகோதரரும், காதர் இப்ராஹிம், சேக் தாவூத் ஆகியோரின் மைத்துனரும், கடற்கரை தெருவை சேர்ந்த இலியாஸ் அகமது அவர்களின் மாமனாரும், முகமது யூனுஸ், சபீர் அலி, ஆதில் ஆகியோரின் பெரியப்பாவுமாகிய சர்பத் கடை ஜனாப் பஷீர் அகமது அவர்கள் இன்று (10-12-2025) காலை சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (10-12-2025) அஸர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
