அதிரையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை தஞ்சை தெற்கு மாவட்டம் மருத்துவ அணி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (07/12/2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ளும் மருத்துவமனைகள்

  1. அனு மருத்துவமனை – தஞ்சாவூர்
  2. Dr.நாடி மருத்துவமனை – பட்டுக்கோட்டை
  3. தஞ்சாவூர் கேன்சர் சென்டர்
  4. கனகேசதேவர் நினைவு மருத்துவமனை – பட்டுக்கோட்டை
  5. Dr.அகர்வால் கண் மருத்துவமனை – தஞ்சாவூர்
  6. திராவிடன் மருத்துவமனை – பட்டுக்கோட்டை

ஆகிய மருத்துவமனைகள் கலந்து கொள்ள இருக்கின்றன.

இருதயம், மூளை நரம்பியல், புற்றுநோய், கண், பல், நுரையீரல், சிறுநீரகம், எலும்பு, தோல், சர்க்கரை வியாதி, இரத்தகொதிப்பு சம்பந்தமான நோய்களுக்கு முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்டம்
மூலம் தொடர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பயனாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறது – அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகம்.

மேலும் இந்த முகாமோடு ப்ளட் டொனேஷன் முகாமும் நடைபெற உள்ளது. எனவே இரத்த தானத்தை வழங்க விரும்புவோர் ஷிஃபா மருத்துவமனைக்குச் சென்று இரத்த தானத்தை வழங்க இந்த நம்பரை அணுகவும்.

தொடர்புக்கு : 9944941971

Prayer Times

Advertisement