அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் நேற்று (16-08-2025) சனிக்கிழமை மாலை இளைஞர்கள் நல்வழி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ஜமாத் துவல் உலமா சபை மாநில துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி அவர்களது இளமைகால சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும் என்ற தலைப்பில் இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை யாற்றினார்
முன்னதக நிகழ்ச்சிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைவர் பேராசிரியர் M.A. அப்துல்காதர் தலைமை வகித்தனர் சங்க செயலாளர் M.I. அன்சாரி வரவேற்று பேசினார் நிகழ்ச்சி அனைத்தையும் M.F. முஹம்மது சலீம் தொகுத்து வழங்கினார், சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ஹாஃபிழ் முஹம்மது யூசுப் கிராஅத் ஒதினார் நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் ஜமா அத்துவல் உலமாசபை செயலாளர் மௌலவி மீரான் ஆலிம் மற்றும் சங்க நிர்வாகிகள் கருத்துரையாற்றினார் பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய மாநில ஜமாத் துவல் உலமா சபையின் துணை செயலாளர் ,சென்னை ஈத்கா மஸ்ஜித் மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி கே.எம். இல்யாஸ் ரியாஜி எம்.ஏ அவர்கள் கூறியதாவது:-
நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயிலில் வரும்போது என்னுடைய சகாக்களிடம் 100 ஆண்டுகளைக் கடந்த ஒரு சங்கத்தின் நிகழ்வுக்காக செல்கிறேன் அந்த வார்த்தைதான் அவருக்கு பெரிய ஷாக்கிங் கொடுத்தது 100 வருஷமா ஒரு சங்கம் நடக்குதா ஒரு அரசியல் கட்சியோ ஒரு சமுதாய அமைப்போ தன்னுடைய நிலவியல் அளவை 100 ஆண்டுகளுக்கு யாரும் தன்னுடைய பாரம்பரியத்தை தன்னுடைய பழமையை பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒரு அவசர உலகத்தில் ஒரு வேகமான உலகத்தில் இந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை இடைவிடாமல் உங்களுக்கு நடத்தக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்திருக்கிறான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் நிறைய தியாகம் செய்கிறார்கள். எனவே, மாணவர்கள் பெற்றோர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் உரிய மரியாதை செலுத்துவதும், அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பதும் அவசியம். பெற்றோர்களை பேணுதல் என்பது, அவர்களை மதிக்கவும், அவர்களின் தேவைகளை கவனித்துக்கொள்ளவும், அவர்களின் அறிவுரைகளைக் கேட்கவும், அவர்களை நேசிக்கவும் மற்றும் அவர்களுடன் நல்ல உறவைப் பேணவேண்டும் ,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அன்பு செலுத்துவதோடு, அவர்களைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளனர். எனவே, குழந்தைகளும் பெற்றோர்களை மதிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும் என்று கூறினார்.





