மல்லிப்பட்டினம் MFC அணியினர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு (5,s) கால்பந்து போட்டி மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 18,19,20 ஆகிய 3 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (20-07-2025) மாலை அதிரை AFFA அணியினருக்கும் அதிரை ROYAL FC அணியினருக்கும் நடைபெற்றது இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்று முதல் பரிசினை தட்டிச்சென்றனர்.
இத்தொடரின் முதல் பரிசு 15,025₹ ரூபாயும் இரண்டாம் பரிசு 12,025₹ ரூபாயும் மூன்றாம் பரிசு 8,025₹ ரூபாயும் நான்காம் பரிசு 6,025₹ ரூபாயும் வழங்கப்பட்டது.
இத்தொடரின் முதல் மூன்று இடங்களை பெற்றது அதிரை அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் – அதிரை AFFA
இரண்டாமிடம் – அதிரை ROYAL FC
மூன்றாமிடம் – அதிரை WFC






