தஞ்சாவூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரிக் குழுமம் சார்பில் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான
அறிவியல் கண்காட்சியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித்தனியாகவும் குழுக்களாகவும் பங்கேற்றனர்.
இதில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தலைக்கவசம் மற்றும் செல்ஃபோன் சார்ஜர் உருவாக்குதல், புவி வெப்பமடைதல் குறித்த அறிவியல் விழிப்புணர்வு வாசகங்களை, அழகான வடிவில் எழுதி பொதுமக்களுக்கு இம்மாணவர்கள்
விளக்கினர். தொடர்ந்து அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை,
டெல்டா மாவட்ட கடற்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் சிவசங்கர் தலைமையில் அறிவியல் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். புவி வெப்பமடைதல் குறித்த அறிவியல் விழிப்புணர்வு வாசகங்கள் சிறந்த முறையில் வடிவமைத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் அஜ்முதீன், உதவித் தலைமையாசிரியர் ஏ.எல்.அஷ்ரப் அலி, அறிவியல் ஆசிரியர்களான சாதிக் அலி, ராஜேஷ், தமிழாசிரியர் குணசேகரன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.
அறுபது பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்ற இக்கண்காட்சியில் இரண்டாமிடம் பிடித்த இம்மாணவர்களுக்கு, பள்ளியின் நிர்வாகி மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அலுவலகப் பணியாளர்கள் சார்பில் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டு நிகழ்வு நடந்தது. இதில் பாராட்டுச் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டன.
செய்தி : கல்லிடைக் குயில்

