அதிரையில் நாளை AFWA விளையாட்டு மைதானம் துவக்க விழா.

ஒவ்வொரு ஊருக்கென்று அடையாளமெனவும் சொல்லிக் கொள்ளவும் தனித்துவங்கள் இருக்கத்தான் செய்யும், நமது ஊரான ‘அதிராம்பட்டிணம்’ மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், கொடைவள்ளல்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சாதனையாளார்கள், விளையாட்டு வீரர்கள் என வியாபித்திருக்கும் ஊர்!

நூற்றாண்டுகள் கடந்த முஹல்லா சங்கங்கள், மார்க்க கல்வி மதரஸாக்கள், திக்ரு மஜ்லீஸ், அதிகமான பள்ளிவாசல்கள், கல்வி நிலையங்கள் என தன்னகத்தே கொண்டிருக்கும் அழகியலின் அசலாக அதிராம்பட்டினம் திகழ்கிறது.

ஆங்காங்கே கிடைக்கின்ற இடங்களில் வசப்படும் வெளிப்பரப்புகளில் இளையோரின் விளையாட்டு பொழுதுகள் கழியும், அதிமுக்கியமாக நல்லொழுக்கமுள்ள சமுதாயமாக உருவெடுக்க இளையோர் வசம் அவைகளை நிலைநிறுத்திட வேண்டும் என்ற மூத்தோர் வழிகாட்டல் முன்னிருத்தப்படுகிறது.

நெடுநாள் ஏக்கம் நெருக்கத்தில் வந்துவிட்டது!

ஆம்! அதிரை ஃப்ரெண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ் AFWA இளையோர் மட்டுமல்ல பெரியோர்களின் கனவை நனவாக்கும் ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மைதானம்’ என தாரக மந்திரமாக முன்னெடுத்து ‘இன்ஷா அல்லாஹ் நாளை 20-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணி அளவில் மைதானம் துவக்கம் – விழாவாக’ நடைபெற இருக்கிறது.

இடம்: நடுவிக்காடு வழி அதிராம்பட்டினம்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!