பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு மகளிர் மேலிநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திமுக சார்பில் பரிசளிப்பு!

அரசு மகளிர் மேலிநிலைப் பள்ளி அதிராம்பட்டினம் 2024 – 2025 ஆம் கல்விஆண்டில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கு நடைபெற்ற பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம்பிடித்த மாணவிகளுக்கு திமுக சார்பில் பரிசுகள் வழங்கும் விழா கோலகலமாக (04.06.2025) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நடைபெற்றது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் M.ராஜாத்தி, M.வினோசிகா ஆகிய இருவரும் ஒருசேர முதலிடம் பெற்றனர். J.ஜெஸ்மி இரண்டாமிடமும், S.யோகவர்த்தினி மூன்றாம் இடமும் பெற்றனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் M.தரண்யஸ்ரீ முதலிடமும், A.ஆர்த்தி இரண்டாம் இடமும், G.சிவரஞ்சனி மூன்றாம் இடமும் பெற்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மு.அபிநயா முதலிடமும், பா.அபிநயாஸ்ரீ இரண்டாம் இடமும், மு.காவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.

இவர்களை பாராட்டும் வகையில் நகர திராவிட முன்னேற்ற கழகம், அதிராம்பட்டினம் கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பெரியார், திருவள்ளுவர், பாரதியார், Dr.A.P.J அப்துல் கலாம் இவர்களின் உருவச் சிலைகளை பரிசுகளாக வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இவ்வண்ணம் நகரமன்ற தலைவர் தாஹிரா அம்மாள் (அப்துல் கரீம்), நகர்மன்ற துணைத்தலைவர் இராம குணசேகரன், கவுன்சிலர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் கே.இத்ரீஸ் அஹமது மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பாக மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.

Prayer Times

Advertisement