“D லைசென்ஸ்” என்பது கால்பந்து பயிற்சியாளர்களாக ஆவதற்கான ஒரு அறிமுகப் படிப்பு ஆகும். இது இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மூலம் நடத்தப்படுகிறது, மேலும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் இந்த படிப்பு திறக்கப்பட்டுள்ளது.
“D லைசென்ஸ்” படிப்பு இது கால்பந்து பயிற்சியாளர்களாக ஆவதற்கான முதல் படிப்பு ஆகும். இது கால்பந்து பயிற்சியின் அடிப்படைகளை கற்பிக்கும். இந்த படிப்பு AIFF மூலம் நடத்தப்படுகிறது. AIFF என்பது இந்திய கால்பந்து விளையாட்டின் அதிகாரப்பூர்வமான அமைப்பு ஆகும். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கால்பந்து விளையாடும் அனுபவம், கால்பந்தில் ஆர்வம் மற்றும் பயிற்சியில் ஆர்வம் ஆகியவை இருக்க வேண்டும்.
இந்த படிப்பு, பயிற்சியாளர்களுக்கு கால்பந்து பயிற்சியின் அடிப்படைகளை கற்பிப்பதுடன், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது. இந்த படிப்பு, பயிற்சியாளர்களுக்கு திறன்கள் மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான ஒரு உந்துதலாகவும் உள்ளது. இந்த படிப்பு ஒரு அறிமுகப் படிப்பு ஆகும்.
இந்நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) 2024-25 ஆண்டிற்கான “D லைசென்ஸ்” தேர்வு கடந்த 21-05-2025 முதல் 26-05-2025 வரை ஆகிய ஆறு நாட்கள் பஞ்சாப் ஜலந்தரில் அமைந்துள்ள FOOTBALL KICKERS ACADEMYயில் நடத்தியது. இந்த “D லைசென்ஸ்” தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தம் 17 நபர்கள் கலந்துகொண்டனர் அதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் அவர்களின் மகன் மு.இ.ஷபீக் அஹமது (BE.eng.,BPED) என்பர் “D லைசென்ஸ்” தேர்வில் கலந்துகொண்டார்.
25 பேரை தேர்ந்தெடுக்க கூடிய இந்த தேர்வில் 17 பேர் மட்டும் கலந்து கொண்டனர் அந்த 17 பேரில் ஒருவரான சபீக் அஹமது என்பவர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று லைசன்ஸ் பெற்றுள்ளார் இவர் ஒருவரே அதிராம்பட்டினத்தில் முதன் முதலாக “D லைசன்ஸ்” பெற்றவர் “D லைசென்ஸ்” பெற்ற இவர் கால்பந்து பயிற்சியாளராகவும் உடற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றலாம்.








