அதிரை மக்தப் அல் லத்தீஃப் நடத்தும் முப்பெரும் விழா!

அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 17 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 22 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டின் ஆலோசனைப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனையடுத்து தற்போது 2024 – 2025 ஆண்டிற்கான ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அனைத்து பள்ளிகளிலும் மக்தப் வாரியாக நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் அதிரை மக்தப் அல் லத்தீஃப் நடத்தும் ஹிஃப்ழு நிறைவு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற (03-06-2025) அஸர் தொழுகை முதல் இஷா வரை அல் லத்தீஃப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders