அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 76 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (75/76) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடம் - ராஜாதி & வினோதினி - 531/600
இரண்டாமிடம் - ராஜேஷ்னி - 521/600
மூன்றாமிடம் - யோகா வர்ஷினி - 509/600

சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 99% என்பது குறிப்பிடத்தக்கது.