ஹஜ் செல்ல இருக்கும் அதிரையர்கள் கவனத்திற்கு! அதிரையில் இன்று ஹஜ் பற்றிய வழிகாட்டி முகாம்!

இந்த வருடம் புனித ஹஜ் செல்ல இருக்கும் ஆண்கள் – பெண்கள் இருபாலருக்கும், இன்று (10-04-2025) காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை தமிழ்நாடு ஹஜ் சொஸைட்டி நடத்தும் ஹஜ் பயண வழிகாட்டி முகாம் நடைபெற இருக்கிறது.

செக்கடிப் பள்ளியில் ஆண்களுக்கும், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பெண்களுக்கும் என ஒரே நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இன்ஷா அல்லாஹ்! இந்த வருடம் ஹஜ் பயணம் செல்வோர் இந்த சிறப்பு பயிற்சி முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டிணம்

Prayer Times

Advertisement