தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மணக்கரம்பை மற்றும் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பழுதடைந்த குழாயை சரி செய்யும் பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பல்வேறு பகுதிகளில் வரும் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார்.