அர்டா வளாகத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் இலவச இரத்த பரிசோதனை முகாம்!

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண் பெண் இருவருக்கும் கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை அதன் வளாகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அர்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இம்முகாமில், ஹீமோகுளோபின், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நாள்: 26.01.2025
நேரம்: காலை 8 மணிமுதல் மாலை 1 மணி வரை
இடம்: ARDA வளாகம் (புதுப்பள்ளி எதிரில்)

Prayer Times

Advertisement