அதிரையில் இயங்கி வரும் MSM மருத்துவமனையில் நாளை 14/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை செல்லியம்மன் திருமணமண்டபம், (காவல் நிலையம் எதிரில், மாபெரும் பன்நோக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.
ரூ2000மதிப்புள்ள பரிசோதனை கட்டணம் முற்றிலும் இலவசம், மேலும் சிறப்பு சலுகையாக இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும், மருந்து மாத்திரைகள் இலவசம்
இலவசமாக பார்க்கப்படும் பரிசோதனைகள்
- ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல்
- ரத்த அழுத்த பரிசோதனை
- சர்க்கரை நோயாளிகளுக்கான கால் பாத உணர்வு பரிசோதனை (Biothesiometry)
- எழும்பு அடர்த்தி கண்டரியும் பரிசோதனை (BMD)
- அதிநவீன கருவிமூலம் தோல் நோய்கள் கண்டறிதல் அளிக்கப்படும் சிகிச்சையும் ஆலோசனையும்
- இடுப்பு மூட்டு, கை, கால், முதுகு தண்டுவடம், தோள்பட்டை வலி கால் வளைந்து காணப்படுதல்
- பச்சிளம் குழந்தைகளின் பிறைவி வளைபாதம்
- பெண்களுக்கான பொது மருத்துவம்
- பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம்
- உடல்பருமனால் அவதிப்படும் பெண்களுக்கான மருத்துவம்
- சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மருத்துவம்
- சோரியாஸிஸ், வெண்புள்ளி, கரும்புள்ளி, இளநரை, முடிஉதிர்தல், படர் தாமரை, படை, நகங்களில் ஏற்படும் பூஞ்சை- தொற்றுகள், நாள்பட்ட பூச்சிக்கடி, சொரி, சிரங்கு, வெப்பத்தால் ஏற்படும் தோல் அலர்ஜி, முக சுருக்கங்கள், பொழிவில்லா முகம் அழகு சேர்ப்பது போன்ற பிரச்சனைகளுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் ஆலோசனை வழங்கப்படும்.
சிறப்பு மருத்துவர்கள்
Dr. ஷேக் சபியுதீன் M.B.B.S., D.Ortho, CSFA (USA) முட நீக்கியல், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்.
Dr.முஃபிதா சஃபியுதீன் M.B.B.S., FC. Diab., பொது மருத்துவர்.
Dr. அஜய் விக்னேஷ் M.B.B.S., M.D.DVL,FAM, DHT தோல், அழகியல் நிபுணர்.
MSM மருத்துவமனை
17-C, பிள்ளையார் கோவில் தெரு, இந்தியன் வங்கி அருகில், பழைய இமாம் ஷாஃபி பள்ளி எதிரில்