ஜியோவை தொடர்ந்து டெலிகாம் துறையை சேர்ந்த ஏர்டெல் நிறுவனமும், தனது சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு:
பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 20 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,
- 28 நாட்களுக்கு 179 ரூபாயில் வழங்கப்படு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 84 நாட்களுக்கு 455 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- ஒரு வருடத்திற்கு 1799 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் வாய்ஸ் திட்டத்தின் கட்டணம் தற்போது 1999 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 265 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 299 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 359 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 409 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 399 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 56 நாட்களுக்கு 479 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 579 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 56 நாட்களுக்கு 549 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 649 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 84 நாட்களுக்கு 719 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 859 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 84 நாட்களுக்கு 839 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 979 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 365 நாட்களுக்கு 2,999 ரூபாயில் வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா திட்டத்தின் கட்டணம் தற்போது 3,599 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- நாளொன்றிற்கு 19 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்பட்ட சேவையின் கட்டணம் தற்போது 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- நாளொன்றிற்கு 29 ரூபாய்க்கு இரண்டு ஜிபி டேட்டா வழங்கப்பட்ட சேவையின் கட்டணம் தற்போது 33 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- அடிப்படை திட்டம் முடியும் வரை வேலிடிட்டி கொண்ட 4 ஜிபி டேட்டா திட்டத்திற்கான கட்டணம் 65 ரூபாயிலிருந்து 77 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது
போஸ்ட் பெய்ட் திட்டங்கள்:
399 ருபாயாக இருந்த மாதந்திர சேவைக்கான கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 499 ரூபாயாக இருந்த சேவைக்கான கட்டணம் 549 ரூபாயாகவும், 599 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் 699 ரூபாயாகவும், 999 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் ஆயிரத்து 199 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் விளக்கம்:
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிக மாதிரியை செயல்படுத்த, ஒரு பயனருக்கு மொபைல் சராசரி வருவாய் (ARPU) ரூ.300க்கு மேல் இருக்க வேண்டும் என்று பாரதி ஏர்டெல் (‘Airtel’) பராமரித்து வருகிறது. ARPU இன் இந்த நிலை நெட்வொர்க் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் மற்றும் மூலதனத்தின் மீது சுமாரான வருமானத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சூழலில், தொழில்துறையில் கட்டணங்களை சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். ஏர்டெல் அதன் மொபைல் கட்டணங்களையும் ஜூலை 3, 2024 முதல் திருத்தியமைக்கும். பட்ஜெட்டில் சவாலான எந்தச் சுமையையும் அகற்ற, நுழைவு நிலை திட்டங்களில் மிகக் குறைந்த விலை உயர்வு (ஒரு நாளைக்கு 70 பைசாவிற்கும் குறைவாக) இருப்பதை உறுதி செய்துள்ளோம்.