அதிரடியாக உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…

அதிரடியாக உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்: இந்தியாவின் டாப் தொலை தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.

கடந்த 2016ல் அறிமுகமான ஜியோ வாடிக்கையாளர்களை கவர பல இலவச திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. இதனை அடுத்து கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைந்த கட்டணத்தை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செல்போன் கட்டணத்தை ஜியோ நிறுவனம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய கட்டணம் நடைமுறை ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1GB Data 28 நாட்களுக்கு ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.209 ஆக இருந்த நிலையில், தற்போது 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டணம் குறித்து பேசிய ஆகாஷ் அம்பானி, “5 மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதால் தொழில்துறை கண்டிபிடிப்புகள் மேம்படும். நிலையான வளர்ச்சி இருக்கும். புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருப்பது சரியான திசையில் செல்வதற்கான முதல் படியாகும். எங்கும் நிறைந்த, உயர்தர, மலிவு விலை இணையம் டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது, இதற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்கிறது. ஜியோ எப்பொழுதும் நம் நாட்டையும் வாடிக்கையாளரையும் முதலிடத்தில் வைக்கும், மேலும் இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும்” என்றார்.

ரீசார்ஜ் ப்ளான்:

 • 2GB Data 28 நாட்களுக்கு ரூ.189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.155 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 1GB Data 28 நாட்களுக்கு ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.209 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 28 நாட்களுக்கு ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.239 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 2GB Data 28 நாட்களுக்கு ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.299 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 2.5GB Data 28 நாட்களுக்கு ரூ.399 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.349 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 3GB Data 28 நாட்களுக்கு ரூ.449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.399 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 56 நாட்களுக்கு ரூ.579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.479 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 2GB Data 56 நாட்களுக்கு ரூ.629 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.533 ஆக இருந்தது.
 • 6GB Data 84 நாட்களுக்கு ரூ.479 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.395 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 1.5GB Data 84 நாட்களுக்கு ரூ.799 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.666 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 2GB Data 84 நாட்களுக்கு ரூ.859 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.719 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 3GB Data 84 நாட்களுக்கு ரூ.1,199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.999 ஆக இருந்தது.
 • 24GB Data 84 நாட்களுக்கு ரூ.1,899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.1,559 ஆக இருந்தது.
 • நாள் ஒன்றுக்கு 2.5GB Data 365 நாட்களுக்கு ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.2,999 ஆக இருந்தது.

Prayer Times