தற்போது மிகக் கடினமான வெயில், பலவகையான நோய்கள், அதிகமான விபத்துகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் சிரமப்படுவதை பார்க்கின்றோம். இந்நிலைகள் மாறி மக்கள் அமைதியாக சந்தோஷமாக தக்வாவுடன் வாழ வேண்டும், நாடும் நாட்டு மக்களும் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கண்ணியமிகு ஆலிம்கள் ஆலோசனை செய்த வகையில் தவ்பா மற்றும் ஸலவாத்து மஜ்லிஸ் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்ஷா அல்லாஹ் வருகிற பிறை 28 , நாளை 08/05/2024 புதன்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு சுமார் 5 மணியளவில் மரைக்கா பள்ளியில் தவ்பா மற்றும் ஸலவாத்து மஜ்லிஸ் நடைபெற இருக்கிறது.

அனைத்து மக்களும் கலந்து பயன் பெறுமாறு அதிரை ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.