வெளிநாடு செல்கிறீர்களா? ஏர்டெலின் புதிய ரோமிங் திட்டம் அறிமுகம்! விலை விபரம் இதோ!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 24th April 2024, 01:38 am

ஏர்டெல் சர்வதேச பயணிகளுக்காக புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகப்படுத்தியது. புதிய கட்டணத் திட்டங்கள் ஒரு நாளைக்கு ரூ.133 முதல் தொடங்குகிறது. கூடுதல் டேட்டா, விமானத்தில் இணைப்பு மற்றும் 24×7 தொடர்பு மைய ஆதரவு போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.

இந்தத் திட்டங்கள் 184 நாடுகளில் வழங்கப்படுகின்றன. இந்த புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தின் மூலம் இந்த நாடுகளில் பயன்படுத்த முடியும். auto-renewal அம்சத்துடன் வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரீசார்ஜ் செய்தவுடன், பயனர் அந்த நாட்டுக்கு சென்றபின் இந்த திட்டம் ஆக்டிவேட் செய்யப்படும். விமானத்தில் பயணம் செய்யும் போதே இந்த வசதியை பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான் என்ற பெயரில் புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது ஏர்டெல். 10 நாட்களுக்கு 1 ஜிபி இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் பெற ரூ.899 கட்டணமாகவும், 3 நாட்களுக்கு ரூ.2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல்லின் சர்வதேச திட்டம் ரூ.195 முதல் தொடங்குகிறது. இது ஒரு நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. மேலும் 250 எம்பி டேட்டா, 100 நிமிட அழைப்புகள் (இந்தியாவிற்கு மட்டும், வெளிச்செல்லும் மற்றும் உள்வரும்) மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது.

இதேபோல், நிறுவனம் ரூ.295-க்கு மற்றொரு டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒரு நாளுக்கு செல்லுபடியாகும், ஆனால் 250 எம்பி டேட்டாவை வழங்குகிறது. மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.595, விமானத்தில் டேட்டா நன்மைகள் மற்றும் 1 ஜிபி டேட்டாவுடன் ஒரு நாளுக்கு செல்லுபடியாகும்.

நீடித்த வேலிடிட்டியை வழங்க ரூ. 2,997 ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம், 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டா முழு காலத்திற்கும் 100 நிமிட இலவச அழைப்புகள் மற்றும் 20 எஸ்எம்எஸ் இதில் வழங்கப்படுகிறது. இதேபோல், ரூ.2,998 விலையில் மற்றொரு சர்வதேச ரோமிங் திட்டமும் உள்ளது, இது 30 நாட்கள் வேலிடிட்டி, 5 ஜிபி டேட்டா கேப் மற்றும் 200 நிமிட இலவச ஒவுட்கோயிங் அழைப்புகளை வழங்குகிறது.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter