அதிரையில் நாளை நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டி! (முழு விபரம்)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2023 நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரையில் மாரத்தான் போட்டியை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் காலை 6:30 மணி அளவில் நடத்த உள்ளது.

மேலும் இது மூன்று பிரிவாக நடைபெற உள்ளது. 20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 21 – 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்கள் ஒரு பிரிவும் என 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்களுக்கு 5km வாகத்தான் போட்டி நடைபெறும்.

முதல் 500 நபர்களுக்கு இலவச tshirt வழங்கப்படவுள்ளது

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times