அனைத்து விதமான வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நடுத்தர மக்கள்களில் குறிப்பாக பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய வகையில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
முதலில் உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்கு மட்டும் ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு ஏற்றப்பட்ட நிலையில் தற்பொழுது அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் கீழ் சிலிண்டர் வாங்கும் பயனாளர்களுக்கு ஏற்கனவே 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 200 ரூபாய் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் பயனாளர்களுக்கு 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற பயனாளர்களுக்கு 200 ரூபாய் சிலிண்டர் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
This piece was both insightful and entertaining! For additional info, visit: FIND OUT MORE. What do others think?
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!