எதிர்பாராதவிதமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடும்.
எடுத்துக்காட்டாக, விபத்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ திடீரென ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? ஒருவேளை அவர் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து அதில் ஏராளமான பணத்தை விட்டுவிட்டுச் சென்றிருந்தால் என்னாகும்?
வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்து திடீரென இறந்துபோன வாடிக்கையாளரின் வாரிசுகள் அதை பல வருடங்கள் கழித்து கண்டுபிடித்து விட்டால் அந்தப் பணத்தை எப்படி திரும்பப் பெறலாம்?
இந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு வங்கிகள் சில நடைமுறைகளை வைத்திருக்கின்றன. எப்படி இருந்தாலும் அது உங்களைச் சேர வேண்டிய தொகையாகும். எனவே பொறுமையாக நடைமுறைகளை செய்து முடித்தால் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
வங்கிகளில் சேமிப்பு அல்லது நடப்பு கணக்குகள் 10 வருடங்களுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தாலோ அல்லது டெர்ம் டெபாசிட் முதிர்ச்சித் தேதி முடிந்து 10 வருடங்கள் கழித்தும் அந்தத் தொகையை வாங்காமல் இருந்தாலோ அந்தக் கணக்கில் இருக்கும் தொகையானது ரிசர்வ் வங்கியின் DEAF அக்கவுன்ட்டுக்கு மாற்றப்படும்.
கிடைத்த தகவல்படி, இதுவரை ரிசர்வ் வங்கியின் DEA Fund அக்கவுன்ட்டுக்கு ரூ.35,012 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இதில் எஸ்பிஐ, பிஎன்பி, கனரா வங்கியிலிருந்து தலா ரூ.8086, ரூ.5,340, ரூ.4558 கோடி ரூபாய் சென்றுள்ளது.
இதைச் சமாளிப்பதற்காக, ரிசர்வ் வங்கி அண்மையில் 100 நாள் 100 பேஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இதன்படி அனைத்து வங்கிகளும் டாப் 100 கேட்கப்படாத டெபாசிட்களை அனைத்து மாவட்டங்களிலும் 100 நாட்களுக்குள் பைசல் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தப்பட்டது.
இதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் தங்களது வெப்சைட்டில் கேட்கப்படாத டெபாசிட் விவரங்களை டெபாசிட் செய்தவர்களின் வாரிசுகள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய விவரங்களுடன் பட்டியலிட்டன.
இந்த விவரங்களை அக்கவுன்ட் ஹோல்டர் அல்லது அவர்களது வாரிசுகள் சரிபார்த்து கேட்கப்படாத டெபாசிட் விவரங்களை வங்கியின் வெப்சைட்டில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.இதைத் தொடர்ந்து அதற்கென உள்ள பாரத்தை பூர்த்தி செய்து அல்லது அனெக்ஸர் பி படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ரசீதுகள் மற்றும் கேஒய்சி ஆவணங்களுடன் சென்று பணத்தைக் கேட்கலாம்.
அக்கவுன்ட் ஹோல்டர் இறந்து போயிருந்தால், வங்கிக் கணக்கில் வாரிசைக் குறிப்பிட்டிருந்தால் கேட்கப்படாத தொகையை வாரிசு உரிய நடைமுறைகளை செய்து ஆவணங்களைத் தந்து கேட்கலாம். வாரிசுகளின் அடையாள அட்டை, அக்கவுன்ட் ஹோல்டரின் இறப்பு சான்றிதழ் போன்றவற்றை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
இருப்பினும் வங்கியில் வாரிசு பற்றிய விவரம் தரப்படாமல் இருந்தாலோ அல்லது உயில்கள் எதுவும் எழுதி வைக்கப்படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வாரிசுகள் சட்டப்படி வாரிசு சான்றிதழ் அல்லது லெட்டர் ஆப் அட்மினிஸ்ட்ரேஷனை நீதிமன்றத்தில் வாங்கி வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
சில விஷயங்களில் அக்கவுன்ட் ஹோல்டர் ஒரு உயிலை எழுதி வைத்திருக்கலாம். அந்த வேளையில் வாரிசுதாரருக்கு உள்ள பங்கை வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் இதற்கான உத்தரவை பெற்றபின் வங்கியில் உள்ள பணம் வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
Sources : goodreturns
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?
I found this article both informative and enjoyable. It sparked a lot of ideas. Lets chat more about it. Check out my profile!