அதிரை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரின் வழிகாட்டுதலில் இரவு நேர துப்புரவு பணியை பார்வையிட்ட அதிரை நகராட்சி திமுக கவுன்சிலர்கள்.

சென்னையில் உள்ளாட்சித் துறை சார்பாக நகராட்சி தலைவர் துணைத்தலைவர் களுக்கான பணி வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சியில் I A S அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி பேசினார்கள்

அதில் ஒன்று இரவு நேரத்தில் நகராட்சி சார்பாக நடைபெறும் சுகாதார துப்புரவு பணியினை நீங்கள் சென்று நேரில் பார்வையிடுங்கள் துப்புரவு பணி நடக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று பார்வையிடும் பொழுது பணி செய்பவர்களுக்கு பணியில் கவனம் செலுத்தி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் மக்கள் மத்தியிலும் நாம் தேர்ந்தெடுத்த நகராட்சி தலைவர் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் மக்களுக்காக சிறப்பாக பணி செய்கிறார்கள் என்ற எண்ணமும் வரும் என்று சிறந்த ஒரு ஆலோசனையை வழங்கினார்கள்

அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் பெற்ற பயிற்சியினை அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைமுறைப்படுத்த அதிரை நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கவுன்சிலர்களுக்கு எடுத்துக்கூறி ஆலோசனை வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார்கள் அந்த ஆலோசனையை ஏற்று திமுக கவுன்சிலர்கள் நடைமுறைப்படுத்த முன்வந்திருப்பது மக்கள் பணியில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது

இதற்காக சில நாட்களை ஒதுக்கி இரவுநேர பணியையும் பார்வையிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம் அதிரை நகராட்சியில் மக்கள் பணி செய்ய வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு சிறப்பாக மக்கள் பணிசெய்து அனைத்து மக்களையும் வென்றெடுப்போம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders