1.70 லட்சம் பரிசு மழையோடு அதிரப்போகும் AFWA-வின் 24-வது தென்னிந்திய கால்பந்து தொடர்!

அதிராமப்பட்டினத்தில் “அதிரை பிரண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ்” (AFWA) அமைப்பின் சார்பில் “24th South India Level Football Tournament 2026” கால்பந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் வரும் ஜூன் 26, 2026 அன்று அதிராமப்பட்டினத்தில் உள்ள AFWA ஸ்போர்ட்ஸ் அரேனா மைதானத்தில் தொடங்குகின்றன.

“போதைப்பொருளுக்கு எதிரான” (Say No to Drugs) விழிப்புணர்வை முன்னிறுத்தி இத்தொடர் நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பின்வருமாறு பரிசுத் தொகைகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன: முதல் பரிசு ₹70,024 உடன் கோப்பை மற்றும் பதக்கம், இரண்டாம் பரிசு ₹50,024 உடன் கோப்பை மற்றும் பதக்கம், மூன்றாம் பரிசு ₹30,024 உடன் கோப்பை மற்றும் பதக்கம், நான்காம் பரிசு ₹20,024 உடன் கோப்பை மட்டும் வழங்கப்படவுள்ளது.

இவற்றுடன் வீரர்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் அதிக கோல் அடித்தவர் (Top Scorer), சிறந்த ஆட்டக்காரர் (Best Player), சிறந்த தடுப்பாட்டக்காரர் (Best Defender), சிறந்த கோல்கீப்பர் (Best Goalkeeper) மற்றும் சிறந்த அணி (Best Team) உள்ளிட்ட 15 தனிநபர் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

இத்தகைய சிறப்புமிக்க இத்தொடரை ஊர்மக்கள் அனைவரும் திரளாக வந்து கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மைதானத்திற்கு வர இயலாதவர்களுக்காக அனைத்துப் போட்டிகளும் அமைப்பின் அதிகாரப்பூர்வ சேனலில் நேரலையாக (Live Telecast) ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!