தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வினை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும் 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புதிய பாடப்புத்தகம் தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், (20-05-2026) காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என தெரிவித்தார். (20-05-2026) 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள “SSLC Class 10th Result 2026” என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியை (DD/MM/YYYY) பதிவிடவும். விவரங்களைச் சரிபார்த்துவிட்டு கெட் மார்க்ஸ் ‘Get Marks’ அல்லது சமர்பித்தல் ‘Submit’ என்ற பட்டனை அழுத்தவும். உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். இதன் மூலம் உங்கள் ரிசல்டை பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் 7845252525 என்கிற வாட்ஸ்அப் எண் மூலமாகவும், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள் 14417 / 104 / 14416 மூலமாகவும் உங்கள் ரிசல்டை பார்க்கலாம்.


