பெருநாள் பிறை தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண்கள் – தமிழ்நாடு காஜி அறிவிப்பு!

2026 மார்ச் 19 மாலை ஷவ்வால் / மாதப்பிறை காணுதல் தொடர்பாக உலமா பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நிகழும் ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு, ரமலான் மாதம் 29-ஆம் நாளான 19-03-2026 (வியாழக் கிழமை) மாலை, (ஈதுல் ஃபித்ர் ஈகை பெருநாள்) ஷவ்வால் பிறை காணும் நாளாகும். எனவே, தமிழகத்திலுள்ள உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 19-03-2026 மாலை ஷவ்வால் பிறை பார்க்க முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் எங்காவது பிறை தென்பட்டால், அதுகுறித்த தகவலை தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் உடனடியாக அரசு தலைமை காஜி அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

தகவல் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்கள்:

மவ்லவி N. அப்துல் காதிர் சிராஜி ஹள்ரத் : 9443936604

மவ்லவி M.I. ஹாஜா முஹ்யித்தீன் மன்பயீ ஹள்ரத் : 9940550991

தலைமை காஜி அலுவலகம் : 8098061000

ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்ட பின், அரசு தலைமை காஜி அவர்களால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!