அதிரையில் திடீர் நெட்வொர்க் பாதிப்பு: பராமரிப்பு பணிகள் தீவிரம்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இது குறித்து நெட்வொர்க் ஊழியர்களிடம் விசாரித்ததில், அவசர கால பராமரிப்பு பணிகள் (Maintenance Work) நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று அதிகாலை 5:00 மணி வரை இன்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாகச் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளை நாடுவோர் இந்தத் தற்காலிகத் தடையைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!