இந்தியாவின் தலைசிறந்த முஃப்தி, ஃபக்ஹுல் உம்மத், ஷைகுல் மஷாயிக், மௌலானா மஹ்மூதுல் ஹஸன் கங்கோஹி (ரஹ்) அவர்களின் பிரதான கலீஃபாவும், ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற சஹாரன்பூர் மழாஹிருல் உலூம் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஷைகுல் ஹதீஸ் மற்றும் முதல்வருமான, மஹ்பூபுல் உலமா, ஆன்மீகப் பேரொளி மௌலானா முஃப்தி முஹம்மது தாஹிர் ஹழ்ரத் தாமத் பரகாத்துஹு அவர்கள் இன்ஷா அல்லாஹ், இன்று (16.06.2026 - செவ்வாய்க்கிழமை) நமது ஊரான அதிராம்பட்டினத்திற்கு வருகை தருகிறார்கள்.
அவர்களின் வருகையையொட்டி ஊரில் பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன:
- உலமாக்களுக்கான சிறப்பு நிகழ்வு:
நேரம்: காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை
இடம்: முஹைதீன் ஜாமிஆ பள்ளி (உலமாக்கள் நிகழ்வு நிறைவு) - பெண்களுக்கான நிகழ்வு:
நேரம்: மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை
இடம்: உஸ்வதுர் ரஸூல் நிஸ்வான் மத்ரஸா - ஆண்களுக்கான நிகழ்வு:
நேரம்: மக்ரிப் தொழுகை முதல் இஷா வரை
இடம்: (மர்கஸ்) மரைக்காயர் பள்ளி
இந்த மார்க்கச் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், உலமாக்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு:
7550137660 / 86109 00160 / 93444 41242




Comments (0)
No comments yet.
Write a comment