அதிரை நகர முஸ்லீம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாக சீரமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் அப்துல் காதர் ஆலோசனைப்படி மாவட்ட செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன் கலந்து கொண்டார் அப்போது நகர நிர்வாகம் செயல்பாடுகள் குறித்து மாநில தலைமை உத்தரவின் பேரில் புதிய நிர்வாகத்தை அதிரையில் கட்டமைக்க வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் இளைஞர்கள் புதிதாக இணைக்கப்பட்டு வருவதையும் சுட்டிகாட்டி பேசினார்.

இதனை அடுத்து நகர நிர்வாகத்தில் உள்ள மூத்தோர்கள் ஆலோசனையின் படி புதிய நிர்வாகம் தேர்வாகியது.

நகர தலைவராக வழக்கறிஞர் Z முகம்மது தம்பியும் நகர செயலாளராக A.ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

பொருளாளராக மொய்தீன் அப்துல் காதர் அவர்களும் துணைத் தலைவர்களாக ஷேக் நெய்னா மரைக்காயர், பைத்துல் ரஹ்மான் ஆகியோரை நியமித்தனர். துணை செயலாளராக MR.ஜமால் முகம்மதும் இளைஞர் அணி அமைப்பாளராக அபுஹுரைராவும் துணை அமைப்பாளராக ஹக்கீமும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நகர வர்த்தக அணி (STU) அமைப்பாளராக மொஹ்சீன் அவர்களையும் நகர இளைஞரணி அமைப்பாளாரக ஜைத்தும் துணை அமைப்பாளராக ஃபவ்ஜான் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக பைத்துல்ரஹ்மான் இறைவசனம் ஓத, மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் இந்த நிர்வாக தேர்வு நடைபெற்றது.

இந்த நிர்வாக தேர்விற்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் லத்தீஃப் STU மாவட்ட தலைவர் சுப்புராயன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!