பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகுகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரஇயக்கமும் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி 13-12-2022 அன்றுகல்லூரி கலையரங்கில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர்முனைவர் N.M.I. அல்ஹாஜி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கினார்கள். தமிழ்நாடு மாநில தேசிய ஊரக வாழ்வாதாரஇயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட வள பயிற்றுனர் திருமதி மு.நாராயணவடிவு அவர்களும் பட்டுக்கோட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி க.மல்லிகா அவர்களும் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வினை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த பேரணியும்நடைபெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்தவாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ-மாணவிகள்ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரிநாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜ.முகமது அலி மேற்பார்வையில் நலப்பணித் திட்ட அலுவலர்கள்முனைவர் ஜெ.சுகுமாரன், முனைவர் மு. முகமது மாஜித், முனைவர் பீ.முகமது இத்ரிஸ், முனைவர் இரா. கிருஷ்ணமோணி, முனைவர் மு.சூரத் ஷீபா, பேராசிரியர் திரு. சே. மல்கர்ஒலி மற்றும் முனைவர் சு.கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.