அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15.8.2023 அன்று காலை 09.00 மணியளவில் 77-வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக தொடங்கியது. விழாவின் தொடக்கமாக நமது பள்ளியின் தாளாளர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதைச் செலுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவர் நமது பள்ளியின் வளர்ச்சியினை பற்றி எடுத்துரைத்தார். விடுதலை வீரர்கள் செய்த தியாகங்களை நிறைவு கூர்ந்தார். மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் 5:00 AM Club பற்றி எடுத்துரைத்தார். பின்னர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், உப தலைவரும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினர்.
விழாவில் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பு செய்தனர். மாணவர்கள் தங்களது பங்களிப்பாகக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டுப்பற்றை ஊட்டி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
கராத்தேயில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கான நடைப்போட்டியில் (Walkathon) பரிசுகள் பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் தேசிய உணர்வை ஊட்டும் விதத்தில் விழா இனிதே நிறைவடைந்தது.






Very well written! The insights provided are very valuable. For additional information, check out: LEARN MORE. Looking forward to the discussion!
Great read! The authors perspective is really interesting. Looking forward to more discussions. Check out my profile!
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/ES_la/register-person?ref=T7KCZASX
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.