ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகளின் மாபெரும் அடையாள உண்ணாவிரதம்!!

ஈஸ்ட் – கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் (ECFA) சார்பாக தென்னை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி மாபெரும் அடையாள உண்ணாவிரதம் இன்று (23/07/2023) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வேதாந்தம் திடல் – பேராவூரணியில் நடைபெற்று வருகிறது, E.V.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகள்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை தவிர்த்து, நமது விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் தேங்காய் எண்ணையையே ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் காலை, மதியம் சத்துணவில் ஆரோக்கியம் மிகுந்த தேங்காய் எண்ணையையே பயன்படுத்த வேண்டும்.

தொழில் துறையில் மிகவும் பின்தங்கியுள்ள (Most Industrially Backward) பேராவூரணி பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (Value Added Products) தயாரிக்கும் வகையிலான ஒரு மிகப்பெரிய தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்.

தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களின் (By Products) உள்நாட்டு விற்பனைக்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் அரசு உதவி செய்தல் வேண்டும்.

கேரள அரசு கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை விவசாயிகளிடம் வாங்குவது போல், இங்கும் ஒரு கிலோ தேங்காய் ரூபாய் 40 என கொள்முதல் செய்திடல் வேண்டும்.

அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும், தென்னை நார் தொழிலை மேற்கொண்டிருக்கும் தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீரா பானம் எடுத்து விற்பதற்கு விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் விதமாகவும் கள் இறக்கி விற்பதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்.

NAFED மூலம் மத்திய அரசு தேங்காய் கொப்பறைக்கு MSP விலையில் கொள்முதல் செய்து, சேமிப்பு கிடங்குகளில் தேங்காய் கொப்பறையை சேமித்து வைத்து, காலதாமதமாக குறைந்த விலையில் விற்பனை செய்வது, தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமாகிறது. இதனால், MSP என்பது அர்த்தமில்லாமல் போகிறது. கொள்முதல் செய்யும் கொப்பறைகளை, உடனுக்குடன் விற்பனை செய்திடல் வேண்டும்.

மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து வரும் அனைத்து கொப்பறைகளையும், ஆண்டு முழுவதும் செய்வதுடன், கொள்முதல் விலையை ஒரு கிலோ ரூ.140/= என உயர்த்தித்தர வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் (C.D.B) தமிழ்நாட்டிற்கான துணை அலுவலகத்தை, தேங்காய் விளையக்கூடிய தஞ்சாவூர் அல்லது மைய நகரமான திருச்சியில் அமைத்திடல் வேண்டும்.

வேண்டல் : நமது பகுதிகள் செழித்திட தென்னை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரப் பெருமக்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் தங்கள் ஆதரவை நல்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Joycet
Joycet
5 months ago

This article had me hooked! For further reading, check out: DISCOVER MORE. What are your thoughts?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x