தமிழகம் முழுவதும் வடமாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளிகள் சென்னை திருப்பூர் கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிட சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே வாழ்வாதாரமாக உள்ள தமிழகத்தைச் சார்ந்த கொத்தனார், ஆசாரிகள், பெயிண்டர்கள், ஆசாரிகள் உள்ளிட்ட கட்டட தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருவதால் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 300 கட்டிட தொழிலாளிகள் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பகுதியில் அதிராம்பட்டினம் To பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத் தகவல் அறிந்து அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சக்கரவர்த்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!