அதிரை 12 வது வார்டு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கழிவறை கட்டிடம் திறப்பு விழா அழைப்பு!

ஜனவரி 24, 2023 அதிராம்பட்டினம் நகராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அந்தப் பள்ளியின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கழிவறை வசதி சரியாக இல்லாததை கருத்தில் கொண்ட அந்த வார்டு கவுன்சிலரும் பள்ளி மேலாண்மை குழு தலைவருமான ராளியா சைபுத்தீன் அவர்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட அந்தப் பகுதி திமுக கழக உடன்பிறப்புக்கள் எடுத்த முயற்சியின் பலனாக சிறப்பான செயல் வடிவம் கொடுக்கப்பட்டு தற்பொழுது கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு நிறைவடைந்து இருக்கிறது

12 வது வார்டு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கழிவறை கட்டிடத்தை ஜனவரி 24 2023 காலை 9:30 மணி அளவில் நமது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா, அண்ணாதுரை அவர்கள் திறந்து வைத்து பள்ளியின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்கள் நிகழ்ச்சியில் நமது நகராட்சி மன்ற தலைவர் M.M.S தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன், திமுக கழக நகராட்சி உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் திமுக கழக வார்டு செயலாளர்கள் மற்றும் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்

ஊரின் முன்மாதிரி பள்ளியாகவும் முதன்மை பள்ளியாகவும் ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் 12வது வார்டு நகராட்சி உறுப்பினர் ராளியா சைபுத்தீன் அவர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்க பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள்

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times