வருகிற புது வருடத்தில் (1.1.2023) திருமணம் செய்யவிருக்கும் ஒரு அழைப்பிதழை பற்றித்தான் இந்த கட்டுரை. இதுவரை கண்டிராத வகையில் அத்துனையும் அழைக்கப்படுபவர்கள் உபயோகப்படுத்தும் பொருளாக இருப்பதுதான் அதன் சிறப்பு, மாசு இல்லா உலகம் இருக்க ஒவ்வொரு அரசாங்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் இப்படியும் ஒரு திருமண பத்திரிகையா என்று வியக்கும் வகையில் அதிரையை சேர்ந்த திருப்பூரில் தொழில் செய்துவரும் சபீர் அஹமது என்பவர் தனது மகன் திருமணத்திற்கு பத்திரிகை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான கெமிக்கல் பேப்பர் உபயோகத்தினைத் தவிர்க்க, புதுவிதமாக யாரும் செய்திடாத வகையில் மெல்லிய துணிகளில் பத்திரிகைகளை உருவாக்கி உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழாக அளித்துவருகின்றனர். மேலும் இது பொதுமக்கள் இடையே பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால் பொதுவாக எல்லா இடங்களிலும் காகித அட்டைகள் மூலம் பத்திரிகைகள் அச்சடித்து மேலும் அதில் குர்ஆன் வசங்களையும் துஆ களையும் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வருகின்றனர், அது பெரும்பாலும் ஒரு சில நாட்களில் குப்பைக்கு வந்து விடுகிறது, மேலும் காகித அட்டையாக இருப்பதினால் சுற்றுசூழலுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது, இவைகளை கருத்தில் கொண்டு தாம் வழங்கும் பத்திரிகைகள் ஏதாவது ஒரு பயன்பாற்றிக்கு உதவும் வகையில் மெல்லிய துணிகளில் பத்திரிகைகளை உருவாக்கி இருப்பது அதிரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது…
அதிரை திருமணங்களில் இவ்வாறு பத்திரிக்கை வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது…
MASHA ALLAH ALL THE BEST
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!