அதிரை மின்சார வாரியத்தின் மின் கணக்கீடு அலட்சியம்!

அதிராம்பட்டினம் நகராட்சியின் மின்சார வாரிய D ஜோன் (புதுமனைத்தெரு, CMP லைன், அம்பேத்கார் நகர், காட்டுக்குளம், கல்லுக்கொல்லை,மிலாரிக்காடு,சித்தீக் பள்ளி லைன், MMS கொள்ளை) சில பகுதிக்கு 63 நாட்கள் (14/07/2022 – 14/09/2022) ஆகியும் மின் கணக்கீடு செய்ய மி.வா ஊழியர் அலட்சியம் காட்டி வருகிறார்.

தமிழக அரசின் ஆணைப்படி மின் பயனாளர்களின் மின் கணக்கீடு 60 நாட்களில் செய்யப்பட வேண்டும், ஆனால் அதிரை மின்சார வாரியம் 2 மாதத்திற்குள் மின் கணக்கீடு செய்ய சில பகுதிகளில் அலட்சியம் காட்டி வருகிறது, இதனால் BI-MONTHLY என்ற நிலை மாறி 3-4 நாட்கள் கூடுதலாக ஆவதோடு மின் பயனாளர்களின் மின் பயண்பாடு அதிக அளவில் கூடுகிறது, அதாவது 60 நாட்களில் 500 யுனிட் என்றால் 63 வது நாளில் 520 க்கும் மேல் தாண்டிச்செல்கிறது, இதனால் மின் கட்டணம் 2 மடங்காக உயர்கிறது என்ற கவலைக்குறிய குற்றச்சாட்டை D ஜோன் பகுதி மக்கள் அதிரை மி.வாரியத்தின் மீது வைக்கின்றனர்.

மக்களால் மக்களுக்காகவே ஆட்சி செய்யும் தமிழக அரசின் ஆணையை அதிராம்பட்டினம் மின்சார வாரியம் அலட்சியம் செய்து வருகிறது, இம்மாதிரியான அலட்சியப்போக்கை அதிரை மி.வா துணைப் பொறியாளர் சரி செய்வாரா என்ற எண்ணம் மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது!?.

1 Comment
  • Monat
    Monat
    June 29, 2024 at 2:36 am

    Wonderful perspective! The points you made are very enlightening. For further information, visit: DISCOVER MORE. Excited to hear your views!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders