நாகப்பட்டினம் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 13 வருடங்களுக்கு பிறகு
நேற்று இரவு 9:48 மணிக்கு அதிரை ரயில்வே ஸ்டேஷன் வந்த பொழுது பொது மக்கள் வரவேற்றது மிக சிறப்பு!!
அதிராம்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என 400 க்கும் மேற்பட்ட பொது மக்களின் வருகையால் ரயில்வே ஸ்டேஷன் நிரம்பியது.
மேலும் கேரளா பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அவர்களும் இதே வண்டியில் வருகை புரிந்தார்கள்.
அவர்களுக்கு அதிரை ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சிறப்பான முறையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றது!!
அத்துடன் சுரேஷ் அவர்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தினசரி எக்ஸ்பிரஸ் வண்டி செல்லும் என்கிற தகவலையும் பொது மக்கள் முன்னிலையில் அறிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
நேற்றைய ரயிலில் அதிகமான (50 க்கும் மேற்பட்ட) பயணிகள் பயணம் செய்தது அதிலும் அதிராம்பட்டினம் இரண்டாம் இடத்தில் இடம் பெற்றது!
விரைவில் சென்னைக்கும் நேரடி ரயில் தொடர் வண்டி செல்ல வேண்டும் என்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பு!
இன்று எர்ணாகுளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலையில் 3.25 மணிக்கு அதிரையில் நிறுத்தம் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கிழமைகளில் எர்ணாகுளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் – அதிரையில் அதிகாலையில் 2:40 மணிக்கும் ,
அன்று இரவு 9.35 மணிக்கு நாகப்பட்டினம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அதிரைக்கு வருகிறது அட்டவணை பிரகாரம்!
நமது பாதையில் தொடர் வண்டி விடுவதற்காக முயற்சிகள் செய்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்!
தொடர் வண்டி தினமும் நமது பாதையில் செல்வதற்கு தொடரட்டும் முயற்சி!!