அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோட்டில் உள் புறமாக குண்டும் குழியுமாக உள்ள சாலை செல்கின்றது. பாத்திமா நகர் காலி மனைகள் நிறைந்த பகுதியாகவும் அதன் அருகில் கிராணி மைதானமும் ,
அதன் அருகில் இப்ராஹிம் பள்ளி வாசலும் உள்ளது.
மேலும் அதனை சுற்றிய பகுதிகளில் குடும்பங்களும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடல் ஆரோக்கியம் தரும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன் பிறகு தினமும் மாலை 6:30 மணிக்கு பிறகு அந்த பகுதி முழுவதும் மது பிரியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
இரவு 10 மணி வரையிலும் சில நேரங்களில் அதற்கு மேலே இருக்கும்.
மஸ்ஜித் அருகிலும் உள்ள இடத்தையும் விட்டு வைக்க வில்லை அந்த அளவுக்கு மது பாட்டில் களால் அந்த பகுதி முழுவதும் நிறந்து காணப்படுகின்றன.
இதனால் அந்த பகுதி பொது மக்களுக்கும், மது பிரியர்களுக்கும் அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டு காவல் துறைக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையினால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அப் பகுதி பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.