நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சியின் துணைத் தலைவர் இராம குணசேகரன் ஆகியோரை அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா ஜமாத் தலைவர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் நேற்றைய தினம் மே 20, 2022 சந்தித்து நகராட்சி தலைவராக மற்றும் துணைத் தலைவர் இருவரையும் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
கீழத்தெரு முஹல்லா ஜமாத் தலைவர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் கீழத்தெரு முஹல்லாக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குறைகளை சந்திப்பின் பொழுது அமர்ந்து பேசி சுட்டிக்காட்டினர் அவைகளை கோரிக்கை மனுவிலும் குறிப்பிட்டு மனு கொடுத்து பரிசீலித்து சரி செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்
மனுவைப் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்த நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.