தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு ராஜாமடம் அரசு மருத்துவமனையில் இருந்து 6 நபர்கள் கொண்ட ஒரு குழு அதிராம்பட்டினத்திற்கு அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளது, அதிரையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஹெல்த் செக்கப் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பிபி சுகர் போன்ற வியாதிகள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராயப்படுகிறது, அவ்வாறு ஏதேனும் இருந்தால் அந்த நபரை உடனடியாக ராஜாமடம் அரசு மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வருபவர்களுக்கு அவர்களுடைய நோயினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான மருந்துகளை அவருடைய இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
மேலும், அதிராம்பட்டினம் ஆறாவது வார்டு கவுன்சிலர் கனீஸ் பாத்திமா அஹமத் காமில் அவர்கள் இந்த ஆறு பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நபரை அழைத்துக் கொண்டு தன்னுடைய வார்டு வீடுகளுக்கு வீடு வீடாக காலை 9:30 மணியில் இருந்து தற்போது வரை அவரும் அழைத்து வீடு வீடாக சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.